பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
|
சாம்பல் நிற வண்டு: கோலோட்ரைக்கியா கொன்சங்கினியா
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- முதல் பயிரை விட, மறு தாம்புப் பயிரில் இப்பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படுகின்றது.
- இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகுபோன்று மாறிவிடும்.
- உச்சிப் (குருத்தின்) பகுதி முழுதும் காய்ந்து விடும்.
- பாதிக்கப்பட்ட கரும்பினை இழுத்தால், எளிதில் வெளிவந்து விடும்.
- வேர் மற்றும், அடிக்குருத்து பகுதியில் பெரும் சேதம் விளைவிக்கும்.
- பாதிக்கப்பட்ட கரும்புகள் வேரற்று கீழே சாய்ந்து விடும்.
|
|
|
|
|
|
|
மஞ்சள் இலைகள் |
காய்ந்த உச்சிப் (குருத்தின்) பகுதி |
பாதிக்கப்பட்ட கரும்பு |
பாதிக்கப்பட்ட வேர் |
|
பூச்சியின் விபரம்:
- முட்டை: ஒரு பெண் வண்டானது மண்ணில் 27 முட்டைகள் இடக்கூடியது. இதன் முட்டைகள் உருண்டை வடிவில் மண் தவரினால் சூழப்பட்டிருக்கும்.
- புழு: சதைப்பற்றுடன் ஆங்கில ‘சி’ (C) எழுத்து வடிவில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும். கரும்பின் வேர் மற்றும் மண்ணில் அதிகம் காணப்படும்.
- கூட்டுப்புழு: கூட்டினுள் மண்ணில் ஆழப்பகுதியில் காணப்படும். மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் கூடு மண்ணால் ஆனது.
- வண்டு: வண்டுகள் கூட்டிலிருந்து வெளிவந்த உடன் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். பின் கருமை நிறமாக மாறிவிடும்.
|
|
|
|
|
|
புழு |
|
வண்டு |
|
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறைகள்:
- கோடை காலங்களில் அறுவடை முடிந்த உடன் ஒரு ஆழமான உழவு செய்ய வேண்டும்.
- வயலில் எப்பொழுதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திறுக்க வேண்டும் இதனால் புழுக்கள் மண்ணை விட்டு வெளியே வந்துவிடும்.
இயற்பியல் முறைகள்:
- ஒரு கோடை மழைக்கு பிறகு, வேப்பமரம், தீக்குச்சி மரம், வேலமரம் அருகே இருக்கும் வண்டுகளை எடுத்து அழிக்க வேண்டும். இதற்கு உயர்ந்த ஒளி உடைய பெட்ரோமார்க்ஸ் விளக்கை பயன்படுத்தி வண்டுகளை அழிக்க வேண்டும்.
இரசாயன முறைகள்:
- போரேட் 10 ஜி / கார்போபியுரான் 3 ஜி / கியுனால்பாஸ் 5ஜி @ 25 கி.கி/ஹெ என்ற அளவில் பயன்படுத்தவும்.
- லின்டேன் 1.6 டி 50 கி.கி/ஹெ என்ற அளவில் வேர் மண்டலத்திற்கு அருகே இடலாம்.
- உயிரியல் முறை: ஒரு எக்டருக்கு 2.5 கி.கி Beauveria brongniortii தொழுஉரத்துடன் கலந்து சாம்பல் நிற வண்டு தாக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும்.
|
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115 |
|